பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் பயனாளர்கள்!  - Seithipunal
Seithipunal


முன்னணி சமூகவலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் தங்கள் பயனாளர்களில் 275 மில்லியன் போலி கணக்குகளை கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது போலி பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேஸ்புக் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்துள்ளது. பேஸ்புக் தொடங்கிய காலம் முதலே போலி பயனாளர் கணக்குகள், பயனாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. 

 2019-ம் ஆண்டு இறுதியில் எடுத்த கணக்கின் படி பேஸ்புக் தங்களிடம்  27.5 கோடி போலி கணக்குகள் உள்ளதை கண்டறிந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் தொடர்ந்து சமூகவலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 கோடியாக உயர்ந்துள்ளது.

போலி கணக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலேயெ அதிகம் உள்ளதாகவும் கண்டறியபட்டுள்ளது.  இதனால் தேவையற்ற, போலி பயனாளர்களின் கணக்குகளை உண்மையான, வாடிக்கையான பயனாளர்களின் ஒத்துழைப்போடு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook Find Fake accounts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->