விரைவில் ஸ்மார்ட் டிவிகளுக்கான ட்விட்டர் வீடியோ செயலி - எலான் மஸ்க் தகவல் - Seithipunal
Seithipunal


ட்விட்டரை கடந்த ஆண்டு உலக பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று ட்விட்டரில் பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ராபின்சன் என்ற பயனாளர் ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவிட்டர் வீடியோ செயலி ஒன்று எங்களுக்கு தேவை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டரில் எங்களால் வீடியோக்களை பார்க்க முடியவில்லை என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "அது வந்து கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் பதிவிற்கு பதிலளித்த பயனாளர், இதை நான் பாராட்டுகிறேன். மேலும் யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு அதை திரும்பி கூட பார்க்காத நாள் வரும். அதை என்னால் பார்க்க முடியும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் பதிவிற்கு பின் யூடியூபில் காண்பதை போலவே பல்வேறு விதமான வீடியோக்களை ட்விட்டர் வீடியோ செயலி மூலம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 8 ஜிபி அளவிலான 2 மணி நேரம் வரையிலான வீடியோக்களை பதிவிடும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்காது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon musk says that Twitter video app for smart TVs coming soon


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->