விளம்பரம் மூலம் ட்விட்டரில் பணம் சம்பாதிக்கும் வசதி விரைவில் அறிமுகம் - எலான் மஸ்க் தகவல் - Seithipunal
Seithipunal


ட்விட்டரை கடந்த ஆண்டு பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து ட்விட்டர் பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் ப்ளூடிக் சேவை கட்டணம், தேவையற்ற செலவுகளை குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம் என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ட்விட்டரில் விளம்பரங்களின் அளவை குறைப்பதோடு, விளம்பரம் இல்லாமல் பயனாளர்களுக்கு சேவையளிக்க முடிவு செய்தார். இந்நிலையில் ட்விட்டரில் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் ப்ளூடிக் வசதி கொண்ட பயனாளர்களின் கணக்கில் பதிவிடப்படும் ட்வீட்டுகளுக்கு வரும் ரிப்ளை பகுதியில் விளம்பரம் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தின் மூலம் ப்ளூடிக் பயனாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இடம்பெறும் விளம்பரங்கள் அனைத்தும் முறையான அனுமதி பெற்றவை மற்றும் முறைகேடான விளம்பரங்கள், இன தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறாது என உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon musk says introduced ads revenue feature soon in twitter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->