கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இடையேயான வேறுபாடு என்ன?! - Seithipunal
Seithipunal


கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு...!!

பணப்பரிவர்த்தனை இப்போது சுலபமாகிவிட்டது. நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் பணத்தேவை இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் நமக்கு பணம் விரைவாக கிடைப்பதற்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம்.

நாம் தினமும் எதாவது ஒரு இடத்தில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொண்டே இருக்கிறோம். இது நம்முடைய பண பரிமாற்ற முறையை மிகவும் எளிமையாக கையாளுகிறது. மேலும் நமது பணத்தை பத்திரமாகவும், பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.

மேலும் 16 இலக்க அட்டை எண், காலாவதி தேதிகள், பின் குறியீடுகள் என கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது தெரியுமா? அவை இரண்டும் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் பலன்களை வழங்குகின்றன.

சரி, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுக்கு இடையில் இருக்கும் வித்தியாசங்களை பற்றி இப்போது பார்போம்.

டெபிட் கார்டு என்றால் என்ன?

நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது, உங்கள் வங்கி கணக்குடன் இணைத்த ஒரு கார்டு வழங்கப்படும். இந்த கார்டு தான் னநடிவை உயசன எனப்படும்.

உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு செல்லாமல் ATM-ல் எடுத்து கொள்ளலாம். வங்கி கணக்கில் பணம் இல்லையெனில் பண பரிவர்த்தனை Debit card மூலம் செய்ய முடியாது.

டெபிட் கார்டு பயன்கள்:

டெபிட் கார்டு நீங்கள் நாள் முழுக்க வங்கியில் நிற்காமல் பணத்தை உடனடியாக எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கி கணக்கில் வைத்து உபயோகிப்பதன் மூலம் திருட்டு பயமில்லாமல் இருக்கலாம்.

இதில் இருக்கும் பெரிய குறையானது Pin நம்பரை பறிகொடுக்கும் பட்சத்தில் ஆன்லைன் மோசடியாளர்களால் பணம் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே Pin நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம்.

கிரெடிட் கார்டு என்றால் என்ன?

கிரெடிட் கார்டும் வங்கிகளில் இருந்து தான் பெறப்படுகிறது, ஆனால் கிரெடிட் கார்டு சற்று வித்தியாசமானது. இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கும்.

உதாரணத்திற்கு... உங்கள் வங்கி கணக்கில் ரூ.50000- இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த பணத்தை நீங்கள் எந்த தொகையும் செலுத்தாமல் உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த தொகையை நீங்கள் வங்கிக்கு மீண்டும் செலுத்தும் வரையில் குறிப்பிட்ட அளவு வட்டி கட்ட வேண்டும்.

கிரெடிட் கார்டு பயன்கள் :

கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதாவது பொருள் வாங்கினால் அதை நீங்கள் மாதாந்திர தவணை மூலம் தொகையை திருப்பி செலுத்த முடியும். இந்த கார்டு மூலம் Cashpack, Gift Vouchers etc .. போன்ற பலன்கள் கிடைக்கும்.

இந்த கார்டு வைத்திருந்தால் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். வங்கியில் நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு குறைக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

differents between credit card and debit card


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->