ஏஐ புயல் அமேசானை அடித்தது! - 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்...! - Seithipunal
Seithipunal


செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதன் தாக்கம் தற்போது ஐடி துறையை அதிரவைத்துள்ளது. ஏஐ பயன்பாடு அதிகரித்ததன் பின்னணியில், பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வெகுவாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதுவரை டிசிஎஸ் (TCS), காக்னிசண்ட் (Cognizant), மைக்ரோசாஃப்ட் (Microsoft), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தன. இப்போது அந்தப் பட்டியலில் அமேசான் (Amazon)வும் இணைந்துள்ளது.மென்பொருள், கிளவுட், இ-காமர்ஸ் என பல துறைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வரும் அமேசான் நிறுவனம், தற்போது மொத்தம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அமேசானில் தற்போது 3.5 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 10% ஊழியர்கள் பணிநீக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளாகலாம் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2022ம் ஆண்டில் 27,000 ஊழியர்களை நீக்கிய அமேசான், இப்போது புதிய கட்டமாக இந்த “மறுகட்டமைப்பு நடவடிக்கையை” (Restructuring) முன்னெடுக்கிறது.அமேசான் தரப்பில் வெளியான தகவல்படி,"கொரோனா காலத்தில் தேவையைவிட அதிகமான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

தற்போது செலவை குறைத்து, செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு உலகம் முழுவதும் அமேசான் ஊழியர்களிடையே அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AI storm hits Amazon 30 thousand employees laid off


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->