சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal



புதுடெல்லி, இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் 7 நாட்கள் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. 

இதில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கியது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் 5ஜி அறிமுகமாகும் என்று தெரிவித்திருந்தார். 

முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை தொடர்ந்து தற்போது பிரபல பிசினஸ் லைன் நாளிதழ், "பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நடத்தும் தொடக்க விழாவில் 5ஜி நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார்". என்று    தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5G Network chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->