கடலூர்: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மதன்ராஜ்(19). இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராதா காந்த்(36) என்பவருடன் சோரபாக்கத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ் மற்றும் ராதா காந்த் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின் இணைப்பு மீட்டர் பாக்ஸில் எதிர்பாராத விதமாக தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மயங்கி கிடந்த ராதா காந்தை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார், உயிரிழந்த மதன் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth killed electrocuted in Cuddalore


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->