"காதலை" ஏற்க மறுத்த இளம்பெண்... விஷம் குடித்த பட்டதாரி வாலிபர்... கடலூரில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (28). பட்டதாரி வாலிபரான இவர், இளம் பெண் ஒருவரை பல வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் இளம்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் பிரபாகரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மனவேதனையில் பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின் ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth committed suicide by drinking poison in Cuddalore


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal