திடீரென வெடித்து சிதறிய லேப்டாப் - வாலிபர் படுகாயம்.!
youth admitted hospital for injured laptop blast in kodaikanal
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோர் ஒன்றில் ஜெயவீரன் என்கிற மாற்று திறனாளி சார்ஜ் போட்ட படி லேப்டாப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லேப்டாப் வெடித்து சிதறியது.
இந்தத் தீ அருகிலிருந்த பெட்ரோல் கேனில் பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் ஜெயவீரன் படுகாயமடைந்தார். தீப்பற்றி எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜெயவீரனை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
பின்னர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth admitted hospital for injured laptop blast in kodaikanal