திருநெல்வேலியில் பரபரப்பு.! கள்ளக்காதலி வீட்டில் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்.! நடந்தது என்ன.? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளக்காதலியின் வீட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரவீன்ராஜ் (30). இவருக்கும், ஏர்வாடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரவீன்ராஜ் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்தப் பெண் பிரவீன்ராஜை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டியுள்ளார். இதனால் பிரவீன்ராஜ் மனவேதனையில் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார். மேலும் வயிற்றிலும் குத்திக் கொண்டுள்ளார். 

இதையடுத்து அப்பகுதிகளில் இருந்தவர்கள் பிரவீன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரவீன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man committed suicide by cut his throat in illegal lover house in tirunelveli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->