திருவள்ளூர் அருகே சோகம்: தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்மேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜ் (31). இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வங்கியில் வாங்கிய கடனை சரியாக செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.

இதனால் நிதிநிறுவனம் லாரியை பறிமுதல் செய்ததால் தொழிலில் வருமானமின்றி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வசந்தராஜ் நேற்று, உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி வசந்த ராஜா பிணமாக மீட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide by jumping into lake


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->