தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுகிறதா?  - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகையை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கின் வாயிலாக செலுத்தப்பட்டு வருகிறது. 

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, இந்தத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்டால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படும் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும்" என்று உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Entitlement Amount scheme will stop in tamilnadu


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->