திருநெல்வேலி : தங்க நகையை தர மறுத்த பாஜக நிர்வாகி - கண்ணீருடன் புகார் அளித்த பெண்.! - Seithipunal
Seithipunal


தங்க நகையை தர மறுத்த பாஜக நிர்வாகி - கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்த பெண்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்களில் பேச்சியம்மாள் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் மனுவில், ”எனது கணவர் உடல் ஊனமுற்றவர். 

இவர் கடந்த 2008-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள டி.வி.சுரேஷ்  என்பவரது டைல்ஸ் கடையில் வேலை பார்த்தார். ஆனால், அந்தக் கடையின் உரிமையாளர் சுமார் 8 மாதங்கள் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை.

அப்போது எனக்கு பணம் தேவைப்பட்டதால் அவரிடம் உதவி கேட்டோம். அதற்கு அவர் எனது 13 பவுன் தங்க நகையை வங்கியில் அடகு வைத்து தருவதாக கூறி வாங்கிச் சென்றுவிட்டு ரூ.25 ஆயிரம் மட்டுமே கொடுத்தார். 

சில ஆண்டுகளுக்கு பின்னர் நான் வட்டியுடன் சேர்த்து பணத்தை கொண்டு கொடுத்துவிட்டு எனது நகையை திருப்பி கேட்டேன். ஆனால் இதுவரைக்கும் எனக்கு  நகையை வழங்காமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். ஆகவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.

டி.வி.சுரேஷ், பாஜகவின் நெல்லை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளராக  உள்ளார். பாஜக நிர்வாகி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman petition against bjp excuetive for cheeting jwellary in tirunelveli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->