மதுவுக்கு அடிமையான கணவன்., தினம் வரதட்சணை கேட்டு அடி உதை தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி...!! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், முல்லைவடி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியை சேர்ந்த சோலையம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 சோலையம்மாள் மீண்டும் கர்பமாக உள்ளார். இந்நிலையில், பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். தினமும் மது அருந்தி விட்டு வந்து வரதட்சணை வாங்கி வர சொல்லி தகராற்றில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

சம்பவதன்று,  இருவருக்கும் தகராறூ ஏற்படவே வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயிற்றில் இருந்த அவரது குழந்தையும் உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to dowry Near Salem


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal