கொரோனா பீதியில் விரட்டியடித்த மனைவி.! போக்கிடம் இல்லா கணவனுக்கு பொதுமக்கள் செய்த நன்மை.!  - Seithipunal
Seithipunal


கொரோனாவை காரணம் காட்டி நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு திரும்பிய கணவனை, மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காதச் சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

பாவா(46) சில வருடங்களுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கின்போது பாவா ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றார்.

இந்நிலையில் பாவா ஆதரவற்று சாலையில் நின்ற போது அவரை கண்ட சில சமூக ஆர்வலர்கள் அவருடைய முகவரியை கேட்டறிந்து திருச்சி, துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் விட்டுச் சென்றனர்.

இருப்பினும், அவருடைய மனைவி, ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய கணவன் உடல் மேலும் மெலிந்து, மிகவும் சோர்வுடன் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று எண்ணி வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. 

இதனால் பாவா வாசலிலேயே அமர்ந்துவிட்டார். நள்ளிரவு 12 மணி ஆன பின்னும் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே,  அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife did not allowed to husband on home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->