சென்னையில் பரபரப்பு.. டிஜே நிகழ்ச்சியில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்.! Monkey பாருக்கு சீல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வி.ஆர்.மாலில் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இசைநிகழ்ச்சி மற்றும் மது உள்ளிட்டவை அடங்கிய பார்ட்டி கொண்டாடப்பட்டுள்ளது. இதில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்யை மார்க், விக்னேஷ் மற்றும் பாரத் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். இதில் 800-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மென்பொருள் நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். 

மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் அதிக அளவு மது மற்றும் போதை மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரவீன் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வி.ஆர் மாலில் இருக்கின்ற Monkey பாரில் Great Indian Gathering எனும் பெயரில் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கின்றது. மொபைல் ஆப் மூலமாக புக் செய்து அந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதியிலிருந்து நபர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் வி,ஆர் மாலில் இருக்கும் Monkey பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vr mall money bar sealed


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal