கேலிக்கும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள தவெகவினர் செயல்; போராட்டத்தை தடுத்த போலீஸ்காரரின் கையை கடித்த தொண்டரின் வீடியோ வைரல்..! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தக்காளி மார்க்கெட் அருகே, கடந்த நவம்பர் 22-ஆம் ‍‍தேதி, டாஸ்மாக் கடை அருகே, 'பார்' வசதியுடன் 'மனமகிழ் மன்றம்' திறக்கப்பட்டது. ஒரு வாரமாக செயல்பாட்டில் இருந்து வரும் இந்த மதுபான மனமகிழ் மன்றத்திற்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து, த.வெ.க.,வினர், தர்மபுரி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், 'மனமகிழ் மன்றம்' முன் இன்று (டிசம்பர் -07) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கட்சினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, ஜெமினி, 23 வயதுடைய தமிழக வெற்றிக் கழக தொண்டர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அருண் என்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்துள்ளார்.  இது போலீசார் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், த.வெ.க.,வினர் டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், 16 பெண்கள் உட்பட, 103 பேரை, பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், தவெக தொண்டர் கையை கடித்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தவெகவினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அக்கட்சி தொண்டர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரின் கையை கடித்த நிகழ்வு கடுமையான, கேலிக்கும், விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Video of TVK volunteer biting the hand of a policeman who stopped the protest goes viral


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->