வேட்பு மனு தாக்குதலை விஜய்யின் சொத்து மதிப்பு வெளியான நிலையில், விஜய்யின் சம்பளம் குறித்து தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் பேசிய வீடியோ வைரல்..!
Video of TVK candidate Srinath speaking about Vijays salary goes viral
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 02 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதன்படி, இதற்கான வேட்புமனுவை இன்று பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்கள் குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விஜய்க்கு அசையும், அசையா சொத்துக்கள் சேர்த்து ரூ.520 கோடி இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அசையும் சொத்துகள் மட்டும் ரூ.404 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடியையும், தந்தை சந்திரசேகருக்கு ரூ.3 கோடியையும், தாய்க்கு ரூ.87 லட்சத்தையும் கடனாக கொடுத்துள்ளதாகவும்,
மகன் ஜேசனுக்கு ரூ.08 லட்சமும், மகளுக்கு ரூ.04 லட்சமும் பணம் கொடுத்துள்ளதாக விஜய்யின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜயின் நண்பரும், தவெக நிர்வாகியுமான ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீநாத் ஓராண்டுக்கு முன் விஜய்யின் சம்பளம் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விஜய்க்கு ‘தி கோட்’ படத்தில் ரூ.200 கோடியும், ஜனநாயகன் படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் என கூறியிருந்தார். இந்த சூழலில், பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.520 கோடி என குறிப்பிட்டுள்ளது குறித்து பலர் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் அந்த வீடியோவில் ஸ்ரீநாத் பேசியுள்ளதாவது; விஜய் நல்ல மகன். நல்ல நண்பன். நல்ல கணவர். நல்ல தகப்பன். நல்ல தலைவன். நான் விஜயிடம் ‘எப்போது எம்ஜிஆர் போல ஆகப்போகிறாய்’ என கேட்பேன். அதற்கு அவர், ‘இதுக்கு அப்றம் எங்க கலர் ஆகுறது’ என கேட்டார். அவரிடம், ‘நான் கலர சொல்லல, நடிகன், ஹீரோ, சூப்பர் ஸ்டார் பட்டங்களை பெற்ற நீ எப்போது தலைவர் ஆவாய்’ என கேட்டேன்.
மக்கள் இயக்கம் எப்போது கட்சியாக மாறும் என என்.ஆனந்திடம் கேட்டேன். விரைவில் நடக்கும் என்பார். தற்போது அது நடந்துள்ளது. அவருக்கு சம்பளம் ரூ.200 கோடி (தி கோட்) என இங்கிருக்கும் நண்பர் சொன்னார். விஜய் சம்பளம் தற்போது ரூ.200 கோடி அல்ல, அவர் அடுத்த படத்துக்கு (ஜன நாயகன்) வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரபூர்வமாக எனக்குத் தெரியும். அடுத்த படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்குகிறார் விஜய். தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்'' என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி புகைச்சலை கிளப்பியுள்ளது.
English Summary
Video of TVK candidate Srinath speaking about Vijays salary goes viral