ஆளுநர் தலைமையில் ஊட்டியில் இன்று துணை வேந்தர்கள் மாநாடு.! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நடத்துகிறார்.

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை குறித்து ஆலோசனை செய்ய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ் பவனில் இன்று துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர் என் ரவி நடத்துகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் எந்த மாநாட்டில் ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரவி ஊட்டியில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார் அவர் தொடர்ந்து வரும் ஒன்பதாம் தேதி வரை ஊட்டியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்பின்னர் ஒன்பதாம் தேதி ஊட்டியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஆளுநர் வருகையை ஒட்டி ஊட்டியில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice-Chancellors' conference today in Ooty under the leadership of the Governor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->