விஜயை கைது செய்யாதது ஏன்? - தமிழக அரசை விளாசும் வேல்முருகன்.!!
velmurugan question to tn govt for vijay not arrested karur issue
கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன். விஜயை பார்ப்பதற்காக வந்ததால் தான் 41 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான்.
விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.
வெளிநாட்டில் இருந்து ராகுல் கேட்டு கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?. ராகுல் குறித்து வந்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
velmurugan question to tn govt for vijay not arrested karur issue