சி.எம்.சி காலேஜில் ஒரு சீட்டுக்கு ரூ.57 இலட்சம்.. அல்லக்கைகளுடன் சிக்கிய பாதர்..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் சீனிவாசன். இவரது மகன் ஈஸ்வர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தனது மகனை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சீனிவாசன் இருந்து வந்துள்ளார். 

சி.எம்.சி மருத்துவக்கல்லூரி தேர்வு மூலமாக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அனுமதி வழங்கி வரும் நிலையில், இவருக்கு சீட் கிடைக்கவில்லை என்று தெரிய வருகிறது. தனது மகனுக்கு நேர்மையான முறையில்  சீட் கிடைத்து என்பதை உணர்ந்த சீனிவாசன், எப்படியாவது சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 

இதனையடுத்து சி.எம்.சி தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வரும் சாய்நாதபுரம் சாது என்கிற சத்யராஜை சந்தித்தால், உங்களது மகனுக்கு சீட் கிடைக்கும் என்று சி.எம்.சியில் வேலை பார்க்கும் சிலர் கூறியுள்ளனர். இதனையடுத்து பாதிரியாரை சந்தித்து, தனது மகனுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சி.எம்.சியில் சீட் வேண்டும் என்று கூறியுள்ளார். 

இவரிடம் பணத்தை கறக்க திட்டமிட்ட பாதிரியாரும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் அவரது தம்பி அன்பு கிராண்ட் ஆகியோரை சந்திக்குமாறு கூறி அனுப்பியுள்ளார். இதனை கேட்ட சீனிவாசன் அவர்கள் இருவரையும் சந்தித்து பேசிய நிலையில், ரூபாய் 57 லட்சம் கொடுத்தால் 20 நாட்களில் சீட் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 

இவர்களின் பேச்சில் மயங்கிய சீனிவாசன் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ரூபாய் 57 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்த பின்னர் 2017, 2018 மற்றும் 2019 ஆம் வருடம் சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். 

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்திரமடைந்த சீனிவாசன் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்கவே, கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். கடந்த 15 ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகாரளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore CMC Church Father Medical Seat Fraud police investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->