தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: நாங்கள் இதைத்தான் கேட்டோம் ... திருமாவளவன் பேட்டி!
VCK Thirumavalavan speech
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
தி.மு.க சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தனித்தொகுதி 3, பொதுத்தொகுதி 1 என 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்.
தி.மு.க குழுவினரிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளோம். அதிமுக-பாஜக கட்சிகள் சிதறி கிடக்கிறது.
பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி இயங்குகிறது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan speech