தூத்துக்குடி விஏஓ கொலை குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ், முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். 

இவர் மணல் கடத்தலை தடுத்ததாக கூறி கடந்த மாதம் 26ம் தேதி மணல் மாஃபியாக்களால் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். 

கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மணல் மாஃபியாக்கள் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதற்கிடையே, மணல் மாஃபியா ராமசுப்பிரமணியம் முறப்பநாடு காவல் நிலையத்துக்கு சென்று அங்குள்ள காவலர்களுக்கு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக புகாரும் எழுந்தது.

தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையினர் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாக விசாரணை அதிகாரி நியமனம மூலம் நடைபெறவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAO MURDER CASE KUNDAS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->