நாங்குநேரி சம்பவம்.. நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு.!! - கவிஞர் வைரமுத்து கருத்து.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திர செல்வி ஆகியோரை இரவு நேரத்தில் வீடு புகுந்து அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்களால் சாதி ரீதியில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 7 சிறார்களை போலீசார் கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு அதிகரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் "நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு..

சாதியைக்கூட மன்னிக்கலாம், அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது,

சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே!

முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவது போல்

சாதிமாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்" என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu comment on the Nanguneri incident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->