டொனால்டு டிரம்ப்க்கு 100 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமா? குளியறையில் கிடைத்த ஆதாரங்கள், அதிரும் அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


டொனால்டு டிரம்ப், 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த போது கையாண்ட ஆவணங்கள் அனைத்தையும் ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கமால், தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றசாட்டு எழுந்தது.

மேலும், அரசின் ஆவணங்கள் டிரம்ப் தனது வீட்டில் வைத்து உள்ளார் என்ற புகாரின் பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில், டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

மேலும், நீதிமன்ற வழக்கு பதிவுக்கு பின்னர் டிரம்ப் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அதி முக்கியமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் உட்பட மொத்தம் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் கிடந்துள்ளது.

அதில், அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்களும், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு திட்டங்களும் , ஆயுத திறன், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள், வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் உள்ளிட்ட பல ரகசிய அவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த வழக்கில் வரும் 13-ந் தேதி டிரம்ப் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று, மியாமி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை என  நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA Former President Trump Case issue june 2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->