திருமண வீட்டில் மொய் பணத்துக்கு டிமிக்கி கொடுத்த மர்ம ஆசாமி.! மணமக்களுக்கு ஷாக்.!  - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே நவீன் என்பவருக்கும், ஆந்திரா பகுதியைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. 

கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்கள் மணமக்கள்-இடம் மொய் கவர்களை வாங்கி வைத்துள்ளனர். 

அதனை அருகிலிருந்த ஆசாமி ஒருவர் வாங்கி வைத்துள்ளார். பின்னர் நீங்கள் சாப்பிட செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அங்கிருந்த மற்றவர்களை அனுப்பி வைத்து இருக்கின்றார். அவர்களும் உறவினர் தானே என்று நம்பி பணத்தை கொடுத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளனர் .

ஆனால், அவர் பண பையோடு எஸ்கேப் ஆகி இருக்கின்றார். அங்கு வந்தவர் உறவினரா என்பது கூட தெரியாமல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருமண வீட்டினர் இழந்திருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unknown men abused marriage money in kummidiboondi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal