மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடிக்கு வருகை! - Seithipunal
Seithipunal


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரைப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக நாளை தூத்துக்குடி வருகிறார். 

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது, நாளை மதியம் 2:30 மணி அளவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். 

அதற்கு முன்னதாக வெள்ளம் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். 

விமான மூலம் டெல்லியில் இருந்து மதுரை வரும் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். 

தூத்துக்குடி நகரம், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், சேதமடைந்த நிலங்கள் போன்றவற்றை பார்வையிடுகிறார். 

மத்திய அரசிடம் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை நிவாரண நிதியாக ரூ. 21,000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Nirmala Sitharaman visit Tuticorin tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->