செப்டிக் டேங்கில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் - 2 பேர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாஸ்திரம்பாக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது மகன் பிரதீப்பை (6) அழைத்து கொண்டு வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார். 

அங்கு மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகே விளையாடிக்கொண்டிருந்த பிரதீப் திடீரென காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், குடிநீர் குழாய்க்கு அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்துள்ளார். 

அப்போது, பிரதீப் அந்தக் குழாயில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதை கண்ட மணிகண்டன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுவன் பிரதீப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், மூடப்படாத செப்டிக் டேங்கில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவத்தில் வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற செயலாளர் மற்றும் டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples suspend for boy died fell down in septic tank


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->