இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8.450 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8.450 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது.!

நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா புத்தளம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக மீன்பிடி பைபர் படகு ஒன்று கடலில் நின்றுகொண்டிருந்தது. 

உடனே ரோந்து போலீசார் விரைந்துச் சென்று சோதனையிட்டனர். அந்த சோதனையில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, ரோந்து போலீசார் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பைகளில் 8.450 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் ஆகும்.

பின்னர், அந்த படகில் வந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கூலிக்கு தமிழகத்துக்கு தங்கம் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kidnape gold in srilanga


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->