மருத்துவ செலவுக்கு பணம் தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனதிற்கு 2 லட்சம் அபராதம்.! - Seithipunal
Seithipunal


மருத்துவ செலவுக்கு பணம் தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனதிற்கு 2 லட்சம் அபராதம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். மின்வாரிய ஊழியராக பணியாற்றி வரும் இவர்  இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் தன் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். 

இந்த நிலையில் அவரது மகனுக்கு திடீரென கை வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடனே விஜயகுமார் அதற்கான மருத்துவ பில்களுடன் செலவு செய்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரினார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்கு உரிய பதில் சொல்லாமல் பணம் வழங்காமல் நிராகரித்தது. 

இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும் அவர் உரிய பதில் சொல்லவில்லை. இதையடுத்து விஜயகுமார் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். 

இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர். அப்போது, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டிய நுகர்வோர் நீதிமன்றம், விஜயகுமாருக்கு சிகிச்சைக்காக வழங்கவேண்டிய இன்சூரன்ஸ் தொகை 1 லட்சத்து 37 ஆயிரத்து 150 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

மேலும், வழக்கு செலவுத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவைக்குறைபாட்டிற்காக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இதனை  ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two kahs fine to insurance company in kanniyakumari


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->