திருவண்ணாமலை || கழிவறை வசதி இல்லாததால் 2 குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியகரம் அருகே காந்திநகர் கிராமத்தில் பெண் ஒருவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் பின்னால் அவரது மகள் மற்றும் அவரது அண்ணன் மகள் உள்ளிட்ட இருவரும் சென்றனர்.

அப்போது திடீரென பின்னால் வந்த இரண்டு பெண் குழந்தைகளும் அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தனர். இதை கவனிக்காமல் அந்தப் பெண் வீட்டிற்கு வந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணின் அண்ணி, குழந்தைகள் இருவரும் எங்கே என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து அனைவரும் பல இடங்களில் குழந்தைகள் இருவரையும் தேடினர். அப்போது குழந்தைகள் இருவரும் கிணற்றில் மிதப்பது தெரியவந்தது. உடனே அனைவரும் குழந்தைகளை வெளியே எடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனே இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறை வசதி இல்லாததால் 2 குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two girls sucide in tiruvannamalai for no toliet fecilities


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->