ராஜபாளையம் நித்தியானந்தா ஆசிரம வழக்கில் திருப்பம் ! ‘சீடர்களை வெளியேற்றக்கூடாது’ - நீதிமன்றம் - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் நிலத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்த தியானபீட ஆசிரமம் தொடர்பாக, அதன் அறங்காவலர் சந்திரசேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “ராஜபாளையம் வருவாய் அலுவலர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆசிரமத்தில் தங்கி வந்த சீடர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் போலீசார், வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும் சீடர்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

எனவே இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். மேலும் உண்மைகளை ஆராயாமல் வழங்கப்பட்ட வருவாய் அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, “நித்தியானந்தா தற்போதும் தலைமறைவு குற்றவாளி; அவர் இந்தியாவில்கூட இல்லை.

அவரைச்சேர்ந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்ந்து பார்க்க முடியும்?” என்று முன்பே கேள்வி எழுப்பியிருந்தது. பின்னர், நிலைமைக்கிணங்க, ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்ற வேண்டாம் என்ற இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டது.இந்த விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதற்கான இறுதி தீர்ப்பை நீதிபதி விக்டோரியா கவுரி நேற்று வழங்கினார்.

அதில், ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்தியானந்த சீடர்களை வெளியேற்ற மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கிய உத்தரவு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் தெளிவாக அறிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twist Rajapalayam Nithyananda Ashram case Disciples should not be expelled Court


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->