தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?.. எல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் - டிடிவி குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக்  குறைக்க வாய்ப்பில்லை என தமிழக  நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை வதைக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. 

அதே நேரத்தில், அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க, தற்போது அதனை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக்  குறைக்கும் போது தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா?. 

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வராமல், விலைவாசியை எப்படி குறைக்க முடியும்? எனவே, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn DMK Govt about Petrol Price 21 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->