வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அடித்து விரட்டாத குறையாக பொதுமக்கள் செய்த காரியம்.! போராடிய போலிசாருக்கு கிடைத்த தோல்வி.!  - Seithipunal
Seithipunal


இரவு வேளைகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் சுற்றித் திரிவதாகவும், இவர்களால் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் போராட்டம் செய்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள் கொரோனா பயத்தினால் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 145 பேர் சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை தனிமைப்படுத்த நான்கு குழுக்களாக பிரித்த அதிகாரிகள் திருச்சியில் இருக்கும் பல்வேறு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து சிந்தாமணி பகுதியில் வசித்த மக்களுக்கு தகவல் பரவ அவர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். 

"வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் தான் எங்களுக்கு வருகின்றது. இப்பகுதிகளில் இவர்களை தங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்று போராட்டம் நடத்தினர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 

அதன் பின்னர் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள், "வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் அதிக அளவில் கொரோனா பரவுகிறது. இங்கே தங்கி இருக்கும் பலரும் இரவு நேரத்தில் மிகவும் சாவகாசமாக உலா வருகின்றனர். 

ஏற்கனவே, இங்கு பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நெருக்கமான வீடுகளில் வசிக்கும் சிறுவர்கள் முதியவர்கள் என அதிகம் எங்கள் வீடுகளில் இருக்கின்றனர். இவர்கள் இங்கே தங்க வைத்தால் எங்களுக்கு ஆபத்து தான்." என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy peoples protest against foreign tamilans


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->