திருச்சி: தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம்.. ஆனந்தக்கண்ணீரில் உறவினர்களை நனையவைத்த மணமகள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் திருமலை பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் ஆவார். இவரது மனைவி மல்லிகா (வயது 55). இவர் திருச்சி கண்டோமென்ட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

இராஜேந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், மல்லிகாவின் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும் - மும்பை தனியார் நிறுவன பணியாளராக இருந்து வந்த கீர்த்திவாசன் என்பவருக்கும், திருச்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள இரயில்வே மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்று முடிந்தது. 

தந்தையின் மீது அதிகளவு பாசம் கொண்ட ஜெயலட்சுமி, தனது திருமணத்தை காண தந்தை இல்லை என்று சோகத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து, இக்குறையை நிவர்த்தி செய்ய மல்லிகாவின் குடும்பத்தினர் ரூ.3 இலட்சம் செலவில் இராஜேந்திரன் மெழுகு சிலையை தயாரிக்க பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து, இராஜேந்திரன் உடைகள் அணிந்துள்ளது போல தத்ரூபமான மெழுகு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை புரோகிதர்கள் முன்னிலையில் வைத்து தெரியுமான சடங்குகள் நடைபெற்றது. மணமகள் ஜெயலட்சுமியும் தந்தையின் மெழுகுசிலையை கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தது, திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Daughter Married Father Wax Statue 31 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->