கனமழையால் ஆவடி, திருவள்ளூரில் இருந்து ரயில்கள் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் ரயில் சேவை பாதிப்பு.!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேஷன் பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி வரை  பல இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10:20 மணி முதல் பயணிகள் ரயில் சேவையானது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லக்கூடிய 7 பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் ரயில்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 ரயில்களும் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களில் இருந்து இயக்க தேவையான நடவடிக்கைகளை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லக்கூடிய ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்தும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லக்கூடிய ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிற்பகல் 1:30 மணிக்குமைசூர் செல்ல கூடிய ரயில் ஆவடியில் இருந்தும், 2:15 மணிக்கு திருப்பதி செல்லக்கூடிய ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில் உட்பட 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டுள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் 4வது நடைமேடை மைசூர் செல்லும் ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ரயில் மாற்றப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train service from Avadi and Thiruvalluvar due to heavy rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->