சிவகங்கை சிறுமி விவகாரம் | பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்து நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி! - Seithipunal
Seithipunal


பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மீது புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கல்லலில் பேக்கரி தொழில் செய்து வருபவர் நாச்சியப்பன். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டப்பஞ்சாயத்தின் மூலமாக நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் குணாளன், தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ், இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா ஆகிய 11 பேர் முயற்சி செய்துள்ளனர். 

மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் நாச்சியப்பனின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளான நாச்சியப்பன் கடந்த 2022-ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

பின்னர் இந்த வழக்கு சிபிசிடி விசாரணைக்கு மாற்றப்பட்டநிலையில், நாச்சியப்பனை மிரட்டி பணம் வாங்கிய சம்பவத்தில் கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் குணாளன், ஆலங்குடியைச் சேர்ந்த சாத்தையா, கல்லலைச் சேர்ந்த சரவணன், தேவகோட்டையைச் சேர்ந்த பாலாஜி, அமராவதிபுதூரைச் சேர்ந்த வேலுகிருஷ்ணன், மேலமங்கலத்தைச் சேர்ந்த ஆதிமூலம், வெற்றியூரைச் சேர்ந்த சங்கு உதயகுமார், தேவகோட்டை டிஎஸ்பியாக இருந்த ரமேஷ், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா, நல்லாங்குளத்தைச் சேர்ந்த கலை, கீழப்பூங்குடியைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டனைச் சட்டம் 211, 384, 389, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்னும் பலர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragically just 15 year completed Girl Was Died By Sexual Assault


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->