தென்காசியில் சோகம்!...நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், யானை பாலம் அருகே உள்ள சிற்றாறில், செங்கோட்டை, புளியங்குடி மற்றும் தென்காசி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர் மது அருந்தியுள்ளனர்.

அப்பொழுது கூடுதலாக மது வாங்குவதற்காக அதில் இருவர் மதுக்கடைக்கு சென்ற நிலையில்,  இருவர் மதுபோதையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது அரிகரன் என்ற வாலிபர்  மது போதையில் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

தொடர்ந்து கடைக்கு சென்று திரும்பிய நண்பர்கள் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  தொடர்ந்து ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.   இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திய தீயணைப்பு துறையினர் கரை தேடும் பணியை விட்டு விட்டு கரை திரும்பினர்.

தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட போது, அரிகரனின் உடலை சடலமாக மீட்டனர். வாலிபரின் உடலை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Tenkasi with friends A teenager who was drinking alcohol drowned in the river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->