பூம்புகார் கல்லூரி போராட்டம்.. நாளை வகுப்புகள்.. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.!
Tomorrow bumbuhar college usually classes starts
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழிக்கு அருகில் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பூம்புகார் கல்லூரி இயங்கி வருகின்றது. இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் தர சான்று புதுப்பிக்க கூறியும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரியும் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கல்லூரி வளர்ச்சிக்கான நிதியை முதல்வர் கையாடல் செய்து விட்டதாக கூறி அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர்.
இந்த தொடர் போராட்டங்களால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்து இருந்தார். மூன்றாவது நாளான இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியர் அர்ச்சனா அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கூறினார்கள். முதல்வரை பணி மாற்றம் செய்தால் போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் கூறிய நிலையில், தொடர் போராட்டம் நடந்து வருகின்றது.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் நாளை வழக்கம் போல கல்லூரி இயங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். போராட்டம் முடியாத காலகட்டத்திலும் கல்லூரி வழக்கம் போல இயங்கும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
English Summary
Tomorrow bumbuhar college usually classes starts