தேர்தல் எதிரொலி - தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் சினிமா காட்சிகள் நாளை ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:-

"நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. 

எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன என்றும் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarro theaters close for election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->