நெல்லை || போதிய பணம் இல்லாமல் வந்த அரசு பேருந்து - சுங்கச் சாவடி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் சுங்கக்கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் அரசு பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளியூர் பணிமனையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஒரு பயணி மட்டும் பயணம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பேருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு வந்தபோது, fasttrack ல் போதுமான பணம் இல்லாததால், சுங்கசாவடி வழியாக பேருந்தை அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தனர். 

இதனால், வேறு வழியின்றி பேருந்து மாற்று பாதையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றது. இது போன்று பல பேருந்துகளில் சுங்கக் கட்டணம் சரிவர கட்டாததால் சுங்கசாவடி ஊழியர்கள் கண்டிப்புடன் நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tollgate employees stop govt bus for not pay to toll


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->