கால்நடை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரிகளிலும் 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. 

இங்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகள் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்தனர். 

இதைத் தொடர்ந்து, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் விண்ணப்பித்தவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கான இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மேலும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் மேலும் விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today Veterinary medicine ranking list publish


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->