சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது.. பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பொது தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் வந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ‌

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School edu dept issue again waring for summer spl class


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->