மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் கொரோனா.! அதிர்ச்சியில் மாவட்ட மக்கள்.!  - Seithipunal
Seithipunal


இன்று கொரோனாவால் 1,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,63,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,311 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,37,281 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 18 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,531 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,10,135 ஆக உயர்ந்துள்ளது.

துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது. இதில், ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் இருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 2 corona case in perambalur district


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal