குரூப் 2 தேர்வர்களை எச்சரிக்கும் "TNPSC".. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாகி இன்று வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf  என்ற லிங்கில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 161 பதவிகளுக்கு 1:3 என்ற அளவில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில்,

1) தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்துத் தனிப்பட்ட வகையில் எந்த கடிதலும் தபாலில் அனுப்பப்படாது.

2)எனினும் சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் உளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் இ-மெயில் மூலமாகவும் அனுப்பப்படும். குறிப்பாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், இ மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

3)அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைத் தேர்வர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே நேரத்தில் தொழில்நுட்பக் காரணங்களாலோ, தவறான மொபைல் எண் அல்லது இ மெயில் காரணமாகவோ தேர்வருக்கு செய்தி சென்று சேராவிட்டால், அதற்கு டிஎன்பிஎஸ்சி பொறுப்பேற்காது.

4) தேர்வர்களின் வயது, கல்வித் தகுதி, சாதி, தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், மதம், பாலினம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர், பணி அனுபவம் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்தில் சரியாக உள்ளிட்டிருக்க வேண்டும். 

5)விண்ணப்பம் தவறானது அல்லது முறைகேடானது என கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதேபோல அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ரத்து செய்யப்படும். மேலும்  அடுத்ததாக அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Alerts Group 2 Candidates


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->