பல் பிடுங்கி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து.!! நெல்லை மக்கள் ஷாக் கொடுத்த தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்கு உட்டோட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளை காவலனியம் அழைத்து சென்று பற்கள் பிடுங்கிய விவகாரம் பெரும் சர்சையை கிளப்பியது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தற்போதைய உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் விசாரணை நடத்தி அரைக்கை தாக்கல் செய்தார்.

இந்த விவரரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது நேரடியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவலில் வைக்கப்பட்ட விசாரணை கைதிகளை சித்திரவதை விவகாரம் தொடர்பாக தமிழக காவல் துறை விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு 3முறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதால், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு டிஜிபிக்கு 4வது சம்மன் அனுப்பியுள்ளது. அதில் மார்ச் 1 அன்று ஆணையத்தின் முன் தேவையான பதிவுகள்/அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என தமிழநாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt Canceled Balveer Singh dismissal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->