புயல் உருவாகுவதில் திடீர் திருப்பம்! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை மறுநாள் தான் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வருகின்ற ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், பின்னர் அது புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவான நிலையில், நாளை அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ் பகுதி நாளை மறுநாள் எட்டாம் தேதி தான் உருவாகும் என்றும், அதனை தொடர்ந்து ஒன்பதாம் தேதி காற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில். தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Weather Report IMD 06052023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->