ஆடு, மாடு வளர்க்க வேண்டுமா? - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
tn govt provide subsidy of buy goat and cow
ஏழை மக்கள் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஆடு, மாடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவை இறைச்சிக்காவும், பாலிற்காகவும் வளர்க்கப்படுகிறது. இதனை வாங்குவதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 2022 – 2023 ஆம் ஆண்டு நிதியாண்டில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் போன்றவை வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 15 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஊடு பயிர் அல்லது வரப்பு பயிர் சாகுபடிக்கு ரூ. 5 ஆயிரம், கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ. 15 ஆயிரம், 10 ஆடுகள் வாங்குவதற்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் 10 கோழிகள் வாங்க ரூ 3000, இரு தேனீ பெட்டிகள் வாங்க ரூ 3,200, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 10 சென்ட் பரப்பில் தீவன பயிர் சாகுபடிக்கு ரூ 800 என 50 சதவீத மானியமாக ரூ 50 ஆயிரம் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt provide subsidy of buy goat and cow