ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம்.. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, ஒய்வு பெற்ற சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரங்களை ஆராயவேண்டும். ஆன்லைனில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆன்லைன் கட்டணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும்.

மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கான அம்சங்கள் பற்றி பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும், குழுவின் செயல்பாட்டிற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு, தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை கண்டறியும் தன்மை குறித்து ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new order for online rummy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->