#Breaking: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு ரூ.5 இலட்சம் ஊக்கத்தொகை - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள், 4 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சார்பாக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், தங்களது நாட்டின் அணிகளை அனுப்பிவைப்பார்கள். 

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது என்பது வீரர், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய கௌரவமாகும். கடந்த 2020 ஆம் வருடம் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 205 நாடுகளிலிருந்து 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல், சதயன் ஞானசேகரன் ஆகியோரும், படகுப்போட்டி பிரிவில் வருண் அசோக் தக்கர், கேசி ஞானபதி, நீத்ரா குமணன் ஆகியோரும், வால்சண்டை பிரிவில் பவானி தேவியும், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வளரிவன், தடகள பிரிவில் ராஜீவ் ஆரோக்கியா, ரேவதி, தனலட்சுமி, சுபா மற்றும் நாகநாதன் பாண்டி ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக தடகள வீரர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ.5 இலட்சம் ஊக்கத்தொகை சன்மானம் தமிழக அரசால் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள 5 பேருக்கும் ரூ.5 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Announce Fund to Tokyo Olympics Selection Tamilnadu State Players 6 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->